Tamil Murasu | 11 September 2021

கத்தரிக்காய், கொய்யாப்பழம், கருணைக்கிழங்கு போன்ற பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற, எளிதில் வளர்க்கக்கூடிய காய்கறிகளைக் கொண்ட வேளாண் பண்ணையை இங்குள்ள சமயத் தலைவர்களும் சிங்கப்பூரில் வசிக்கும் தென்கிழக்காசிய நாட்டவரும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.
சிறப்புத் தேவையுள்ளோருக்கான கெனோசியா பள்ளியில் அது உருவாக்கப்பட்டது.
பண்ணையைத் திறந்துவைத்த சமுகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்தினம், பொதுநலனுக்காக பலர் ஒன்றுதிரளும்போது ஏற்படும் பெரிய தாக்கத்துக்கு இந்தப் பண்ணை சான்று என்று தெரிவித்தார்.
Comments