top of page

சிங்கப்பூரின் பல கலாசார சமூகம் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த SG CORE எனும் புதுத் திட்டம்

Vasantham Seithi | 4 September 2021

 

சிங்கப்பூரின் பல கலாசார சமூகம் பற்றிய புரிந்துணர்வை மக்களிடையே மேம்படுத்தும் நோக்கில் SG CORE எனும் முன்னோடித் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.


அதன்கீழ் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக பல்வேறு கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

சமயம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் பயங்கரவாதம் போன்ற வெளியிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் பற்றியும் அவற்றில் விவாதிக்கப்படும்.

அடுத்த ஓராண்டில், தேசிய சேவையாளர்கள், சமூகத் தொண்டூழியர்கள் உள்ளிட்ட சுமார் 400 பேரைச் சென்றடைவது திட்டத்தின் இலக்கு.

சமூகத்தில் எது சரி எது தவறு என்பது குறித்து ஒருமித்த கருத்திணக்கத்தை உருவாக்க, அரசாங்கம், தனிநபர்கள் என அனைவரும் பங்களிப்பது அவசியம் என்றார் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம்.

நற்பண்புகள், படிப்பினைகள் ஆகியவற்றை நிகழ்ச்சியில் கலந்துகொள்வோருக்கு உணர்த்த SG CORE இலக்குக் கொண்டுள்ளதாய் அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் பல்லினச் சமுதாயத்தின் வளர்ச்சியைக் கட்டிக்காப்பதோடு, இங்குள்ள இனநல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும் அந்தப் புதிய முயற்சி கைகொடுக்கும் எனத் திரு. சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments


UEN 201920766R
© Humanity Matters 2023. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • Youtube
bottom of page