top of page

காஸாவில் வாடுவோருக்கு நிதித்திரட்டு

Vasantham Seithi | 17 Nov 2024





காஸாவில் போரால் வாடுவோருக்கு நிவாரண நிதியைத் திரட்ட சுமார் 300 தொண்டூழியர்கள் இன்று (17 நவம்பர்) ஆச்சர்ட் ரோட்டில் ஒன்றுதிரண்டனர்.


வெவ்வேறு வயது, இனத்தைச் சேர்ந்த சிங்கப்பூரர்களுடன் வெளிநாட்டு ஊழியர்களும் அந்த முயற்சியில் பங்கெடுத்தனர்.


காஸாவின் நிலைமை குறித்து கவலைப்படுவதற்குப் பதிலாக உதவிகளைச் செய்யலாம் என்று மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamed) கூறினார்.


அதுபோன்ற முயற்சிகள் சிங்கப்பூர் மக்களின் மனிதாபிமானத்தைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.


Humanity Matters எனும் லாப நோக்கமற்ற அமைப்பும் Rahmatan Lil Alamin அறநிறுவனமும் நிதித்திரட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன.


அடுத்த மாதம் நிவாரணப் பொருள்களை விநியோகிப்பதற்கு ஆயத்தங்கள் நடைபெறும்.


அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஜோர்தான் வழியாகப் பொருள்கள் காஸாவிற்கு அனுப்பப்படும்.


சிங்கப்பூர் காஸாவிலிருந்து வெகுதொலைவில் இருந்தாலும் அதுபோன்ற முயற்சிகள் மக்களின் மனிதாபிமான உணர்வைக் காட்டுவதாகத் திரு ஸாக்கி தெரிவித்தார்.


Comments


UEN 201920766R
© Humanity Matters 2023. All rights reserved.

  • Instagram
  • Facebook
  • Youtube
bottom of page