top of page

காஸாவுக்கு 4 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பும் Humanity Matters அமைப்பு

Vasantham Seithi | 30 May 2021

 

சிங்கப்பூரின், Humanity Matters எனும் அமைப்பு 4 டன் நிவாரணப் பொருள்களைச் சேகரித்து காஸாவிற்கு அனுப்பவிருக்கிறது. அவற்றின் மதிப்பு சுமார் 85,000 வெள்ளி. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத் தரப்புக்கும் இடையே இம்மாதம் 21ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. காஸாவிற்கு மனிதாபிமான உதவி வழங்குமாறு அனைத்துலகச் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நிவாரணப் பொருள்கள் அங்கு அனுப்பப்படுகின்றன. வெவ்வேறு சமயக் குழுக்களைச் சேர்ந்த இளையர்கள் நிவாரணப் பொருள்களைக் காஸாவிற்கு அனுப்பத் தயார் செய்தனர். இளம் சீக்கியர் அமைப்பு, ஸ்ரீ நாராயண மிஷன், முஸ்லிம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டவை அந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளன.


Comments


bottom of page